எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது என்றும் சகல எரிபொருள் வகைகளுக்குமான விலைகள் அவ்வாறே பேணப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட விருந்தது எனினும், திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 450 ரூபாய், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 540 ரூபாய், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 430 ரூபாய் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாய் என்றடிப்படையில், விலைகள் தொடர்ந்து பேணப்படும்.


style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">