மரணம் நல்லது

- பூங்கோதைஶ்ரீ -

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

மரணத்தை மறுவிசாரணை செய்ய

மனு அனுப்பி உள்ளதாக செய்தி

மனிதனிடம் நீதி இல்லாத்ததால் மரணம் நீதிசெய்தது

ஆனால் ………..

மரணத்துக்கே மறுவிசாரணையாம்

என்ன சொல்ல

மரணம் ஒன்றில்லையானால்

மனிதன் நிலை?

மமதையில் மனங்களித்து

ஆணவத்தில் ஆட்டம்போட்டு

அகங்காரத்தில் ஆட்சிசெய்து

ஐயையோ

நினைத்துப்பார்க்கமுடியாத

நரகமாய் பூமி சுழலும்

வல்லரசு நீயா நானா

வாணிபத்தில் நானா நீயா

விளையாட்டில் நானா நீயா

விண்வெளிக்கு நானா நீயா

அணுகுண்டில் நானா நீயா

அழிப்பதில் நீயா நானா

ஆக்குவதில் நீயா நானா

மதங்களிலும் நீயா நானா

ஐயகோ

ஆபத்தில் பூமி சுழலும்

பூமியைப் புரட்டிப்போட்டு

மரங்களை வெட்டுப்போட்டு

பொலித்தீனை மண்ணில் விதைத்து

சூழலை மாசுபடுத்தி

மரணத்தை. தானே தேடும்

மனிதா

மரணத்துக்கு மனு அனுப்புகிறாயா?

புத்தியைத் திருத்திக்கொள்

கறை உன்னிடம் தான்

குறையும் உன்னிடம் தான்

குற்றமும் உன்னிடம் தான்

இயற்கை பேரறிவானது

மரணம் இயற்கையே!

 

மரணத்துக்கு மறுவிசாரணையாம்

ம்ம்……………..!

மரணம் நல்லது தான்