நுவரெலியாவில் பேருந்து விபத்து! நால்வர் படுகாயம்.

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியாவிலிருந்து லபுக்கலை நகரை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று லபுக்கலை கோவிலுக்கு அருகில் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து நேற்று மாலை 4:30 மணியளவில் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரில், நான்கு பேர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும் நுவரெலியா பிரதான பொலிஸ் பரிசோதகர் எச் , ஏ பிரேமலால் தெரிவித்தார் .

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.