பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் கொழும்பிற்கு சென்றுள்ளது

19

சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணித்துள்ளது.இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது. கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது