பெரியார் கருப்புச் சட்டையை அணிந்தார்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்: ப.சிதம்பரம் ட்வீட்
தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என ப.சிதம்பரம் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்றுதெரிவித்திருந்தது குறித்து ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என்பதை நாடறியும்.’ என பதிவிட்டுள்ளார்.