நாட்டை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த தகவல்

இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்தவுடன் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, தான் இன்னமும் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் தாய்லாந்துக்கு செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவதற்காக தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா நேற்று அறிவித்துள்ளார்.இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்றுமு;, இது தற்காலிக தங்குமிடம் என்று தாங்கள் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

எந்த அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது, மேலும் இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் தேட உதவும் என்று பிரதமர் பிரயுத் கூறினார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்னும் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் தெரிவித்தார்.

இந்த விஜயத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு தங்கும் வசதிகளை செய்து கொடுக்காது எனவும் டொன் தெரிவித்துள்ளார்.பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் இருந்தபோது அவருடன் இணைந்து செயற்பட்டதால், இந்த விஜயம் கொழும்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.தாய்லாந்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே அவர் தங்குவதற்கான ஒரு நிபந்தனை என்றும் அமைச்சர் கூறினார்.