சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் தலையிடக் கூடாது: இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும், அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும் வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டையை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.