எதிர்ப்பை மீறி இலங்கை வரும் சீன கப்பல்

எதிர்ப்பை மீறி இலங்கை வரும் சீன கப்பலில் 2000 பேர் உணவின்றி பரிதாப நிலைக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி இன்று வந்தடையவிருந்த யுவான் வாங்-5 கப்பலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் துறைமுகத்துக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன தூதரகத்துக்கு இதனை அறிவித்துள்ளது.வாய்மொழி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாறு மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்தார்.குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கான அனுமதி, ஜூன் 28 ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி ஜூலை 12 வழங்கப்பட்டிருந்தது.

இந்த அனுமதியயையடுத்து, யுவான் வாங் -5 கப்பல் ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது.இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியாமல்  இந்த கப்பலுக்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையை அடைந்த பின்னர், அதிலுள்ள 2000 பேருக்கான உணவு தீர்ந்துவிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்களுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையிலேயே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பிறகு இலங்கை வருமாறு குறித்த கப்பலுக்கு சீன தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.