எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் சவுதி அரேபிய தூதர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்

எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 8ம் திகதியான திங்களன்று எகிப்தில் வைத்து நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி உயிரிழந்துள்ளார்.

இந்த உரையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து இருந்தார்.அல்-கஹ்தானி தனது மனைவி ஆயிஷா அல்-ஜாப்ரியுடன் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் மேடையில் உரையாற்றிக் கொண்டு இருந்த அல்-கஹ்தானி சரிந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.