சீனா தாய்வானுக்கு எதிராக எந்நேரமும் போர்தொடுக்கலாம்: பரபரப்பாகும் சீன தாய்வான் விவகாரம்!
சீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு தூண்டும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான்சி பெலோசியின் விஜயத்தின் பின்னர் தாய்வானிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவிற்காக அந்த நாடு நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள ஜோசப் வூ சீனாவின் இலட்சியம் 23 மில்லியன் மக்களை கொண்ட சுயாட்சி நாடான தாய்வானை கைப்பற்றுவது மாத்திரமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனா தற்போது கிழக்கு தென்சீனாவை தாய்வான் நீரிணையின் ஊடாக இணைக்க முயல்கின்றது இதன் மூலம் அந்த பகுதி முழுவதையும் சர்வதேச கடற்பரப்பாக மாற்ற முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் சீனாவின் நோக்கங்கள் அத்துடன் நிற்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.தாய்வான் தொடர்பான சீனாவின் நடவடிக்கை ஒரு சாக்குபோக்கு மாத்திரமே அதன் இலட்சியங்கள் அதன் தாக்கம் தாய்வானிற்கு அப்பால் நீண்டுள்ளது என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் நாடுகள் அனைத்தும் சீனாவின் ஏதேச்சதிகாரம்; விரிவடைவதற்கு பதிலளிக்க முயலவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாய்வானிற்கான சீனாவின் அச்சுறுத்தல் முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது ஆனால் தனது சுதந்திரம் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தாய்வான் மிகவும் உறுதியாக உள்ளது என தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வு சி.என்.என்.-னிற்கு தெரிவித்துள்ளார்.சீனா பல வருடங்களாக தாய்வானை மிரட்டிவருகின்றது அது கடந்த வருடங்களில் அதிகரித்துள்ளது என தாய்வான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான்சி பெலோசியின் விஜயம் இடம்பெற்றதோ இல்லையோ தாய்வானிற்கு எதிரான சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் எப்போதும் காணப்பட்டுள்ளது இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.தாய்வானை சர்வதேசசமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கு வெளிநாட்டு நண்பர்களை தாய்வானிற்கு அழைப்பது தாய்வானின் முக்கிய தந்திரோபாயங்களில் ஒன்று என தெரிவித்துள்ள அவர் தாய்வானிற்கு வந்து ஆதரவு தெரிவிக்க விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்க முடியாது என சீனா எங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் என நான் அச்சம் கொண்டுள்ளேன், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.