சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நிறைவு விழா
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகி முதல்வர் ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியொர் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி செஸ் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும், நிறைவு விழாவில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.