அணுஉலைப் பகுதியில் பயங்கர வெடிமருந்துடளுடன் ரஷ்யப் படைகள் : உலகை அச்சுறுத்தும் ரஷ்யா
உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுஉலைப் பகுதியில் ரஷ்யப் படைகள் பயங்கர வெடிமருந்தை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் மூலம் ரஷ்யா உலகை அச்சுறுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
அணுமின் நிலைய தளத்தில் பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதோடு, 500 ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.ஜபோரிஜியா அணுமின் நிலைய பகுதியில் மோதல் அதிகமானால், செர்னோபில் அணு ஆலையில் ஏற்பட்டது போன்று மற்றுமொரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது.