திமுக வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு: பா.ஜ.இ தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு!

கெலோ இந்தியா திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல் நிதிகளை பெற எந்தவித முயற்சியும் எடுக்காமல் பொய்களை பரப்பி வரும் திமுக.,வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு’ என தமிழக பா.ஜ.இ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, ‘கெலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், மத்திய அரசு விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் அதிகபட்சமாக குஜராத்திற்கு 608 கோடி ரூபாயும்,உத்தரப் பிரதேசத்திற்கு 503 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

தமிழகத்திற்கு ரூ.33 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் நிதிப்பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தினர். மாநிலப் பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மைஎன  அண்ணாமலை அதில் கூறியுள்ளார்.