ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனா சந்திப்பை புறக்கணித்தது ஜேவிபி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற இருந்தது.

இதில் தமது கட்சி பங்கேற்கும் எனவும், எனினும் தேசிய அரசில் பங்கேற்காது எனவும் அக்கட்சி அறிவித்திருந்தது.எனினும், இறுதி நேரத்தில் முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியை சந்திப்பதில்லை எனவும், மாறாக அவருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.