முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த ஊழியர் : கனடாவில் அதிர்ச்சி
ஊழியர் ஒருவர் தனது முதலாளியின் வீட்டை கிரேன் வைத்து இடித்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவரே தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து தன்னை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரமடைந்து, தனது முதலாளிக்குச் சொந்தமான வீட்டை கிரேன் கொண்டு இடித்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட ஆரம்பித்தால் குறித்த சம்பவம் வைரலானது.இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த ஊழியரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவருக்கு சுமார் 5000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் ஆஜராகும் படியும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.