பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டமை ரத்து. சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான, 4,800 கோடி ரூபாய் ‘டெண்டர்’ முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டரை, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கே வழங்கினார் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவர், மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்இ இதுகுறித்து சி.பி.ஐ,இ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது.
செய்திகளில் தொடுhவன உலகச் செய்திகள்