திமுக குற்றம்சாட்டும் அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்

தொழிலதிபர் அதானி குறித்தும் குற்றம்சாட்டும் தி.மு.க., ஆளும் தமிழக அரசு அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவருடன் இணைந்து தகவல் மையம் அமைப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

லோக்சபாவில், விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் போது, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக உள்ளார். பில்கேட்சை தாண்டி ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். அதனால், சில பேர் வாழ்ந்து கொண்டிருக்க காரணம், அந்த கார்ப்பரேட் தொழிற்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.  ஆனால், அடித்தட்டிலேயே, வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக்கூடிய இந்த ஆட்சி இப்படி இருக்க் கூடிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு அவர்களை வளர்த்தெடுத்து வார்த்தெடுத்து கொண்டு இருக்கக் கூடிய ஆட்சி இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.

இதற்கு பதிலளித்த  நிர்மலா சீதாராமன், பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும் தான் நீங்க் எல்லாம் செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். உங்க, தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இதற்கு 35 ஆயிரம் கோடி மதிப்பாகும். அதானியுடன் சேர்ந்து டேடா சென்டர் அமைக்கிறது. மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆளும்மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன். ராஜஸ்தான் அரசுஇ மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்ததும், அமைச்சர் பேசும் போது திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.இக்கள் முழக்கம் எழுப்பியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.