இளம் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத குழுவினரால் கொடூரமான முறையில் படுகொலை

வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத குழுவினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் அருகே சடலம் ஒன்று இருப்பதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பரிசோதித்த பொலிஸார் உயிரிழந்தவர் இளம் வியாபாரி என்பது தெரியவந்தது.சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் மற்றும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட வர்த்தகர் முதலில் சுடப்பட்டு பின்னர் கூரிய ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யோன்சன் ரஞ்சா என்ற இளம் வர்த்தகர் உயிரிழந்துள்ளதுடன்இ சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இக்கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சிதம்பரபுரம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொலையாளிகளை கைது செய்ய சித்தம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிஸாரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.