2022 யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

 

இங்கிலாந்து வெம்ப்லியில் நடந்த 2022 யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.இந்த போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்தின் பெண்கள் அணி  2022 யூரோவை கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது.1966 இல் ஆண்கள் அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு இங்கிலாந்து அணி பெற்ற முதல் பெரிய கோப்பையாகும்.62வது நிமிடத்தில் எலா டூன் அடித்த கோல் மூலம் இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றது.  எனினும்இ 79-வது நிமிடத்தில் ஜெர்மனியின் லினா மகுல் ஃபிளிக் கோல் அடித்த நிலையில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலைபெற்றது.இறுதியில் மேலதிக நேரத்தில் இங்கிலாந்து அணி கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.