ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்:

போர்த்துகலில் 1000க்கு மேற்பட்டோர் பலி.

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1,000 கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

ஐரோப்பிய நாடுகளின் மேற்கத்திய பகுதியில் வெப்ப அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

 

போர்ச்சுகல் நாட்டில் வெப்ப அலையால் பெருமளவிலானோர் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் கடந்த வாரம் வியாழகிழமை 116.6 டிகிரி பேரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. இது 2003ம் ஆண்டு பதிவான உச்ச வெப்பநிலையை விட சற்று குறைவு ஆகும். இந்த தீவிர வெப்ப அலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி, பெருமளவிலான காட்டுத்தீயும் ஏற்பட்டு உள்ளது.