பிரபாத் ஜெயசூர்யா சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா-இலங்கை அணிக்கு அபார வெற்றி.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 104 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 554 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.அவர், இந்த 200 ஒட்டங்களை பெறுவதற்காக 319 பந்துகளுக்கு முகங்கொடுத்தார்.
தினேஸ் சந்திமலின் இந்த இரட்டை சதம், இலங்கை வீரர் ஒருவர், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கையாகும். ஏற்கனவே குமார் சங்கக்கார, 2007ஆம் ஆண்டில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபாட்டில் இடம்பெற்ற போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கையாக 192 ஓட்டங்களை பெற்றார்.