உலகக் கோப்பை கால்பந்து-கத்தாரை வென்றது ஈக்வடோர்
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் கத்தார் அணியை ஈக்வடோர் அணி 2:0 கோல் விகிதத்தில் வென்றது.
2022 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் முதல் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் பாயித் அரங்கில் நேற்று நடைபெற்றது.
வரவேற்பு நாடான கத்தாரும் ஈக்வடோரும் இப்போட்டியில் மோதின. இப்போட்டியில ஆரம்பம் முதல் ஈக்வடோர் அணி ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியின் 16 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, இச்சுற்றுப்போட்டியின் முதலாவது கோலை ஈக்வடோர் வீரர் என்னார் வலேன்சியா புகுத்தினார்.
31 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அவர் புகுத்தினார். இடைவேளையின்போது ஈக்வடோர் 2:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.