T20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதின . நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலிய கப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது . தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,பின் ஆலன் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.குறிப்பாக பின் ஆலன் ஆஸ்திரேலிய’அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி,சிக்சருக்கு பறக்க விட்டார். இதனால் நியூசிலாந்து அணியின் ஓட்டங்கள் அதிரடியாக உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய ஆலன் 16 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார் மறுபுறம் கான்வே அதிரடியை தொடங்கினார்.அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேன் வில்லியம்சன் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நீசம் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.கான்வே 92 ஓட்டங்களுடனும் ,ஜிம்மி நீஷம் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 201 என்ற ஓட்ட இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது தொடக்கத்தில் வார்னர் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஆரோன் பின்ச் 13 ஓட்டங்களில் வெளியேறினார்.தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 16 ஓட்டங்களிலும் ,ஸ்டோனிஸ் 7 ஓட்டங்களிலும் ,டிம் டேவிட் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர் .அந்த அணியில் மேக்ஸ்வெல் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நம்ம்பிகை அளித்த மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.இறுதியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது.இதனால் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.