மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் மூத்த இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கண்டி தனியார் மலர்ச்சாலைக்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்தியர் ஹர்ஷ சுரங்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

