கிரிஷ் விவகார வழக்கில் நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கிரிஷ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணம் இலஞ்சமாகப் பெற்றமை மற்றும் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைதான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியலே இவ்வாறு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

