யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்திப் படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இந்த கொடூரச் சம்பவம் நேற்றுமாலை பதிவாகியுள்ளது!

நல்லூர், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.