22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு: கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாகவே தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து தமது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்யத் தீர்மானித்ததாக விளக்கியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தங்களது கட்சி மிகவும் வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

