ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘தெம்பிலிலஹுரு’வின் வீட்டிற்கு தீ வைப்பு; தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மித்தேனிய, குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராக அடையாளம் காணப்பட்ட ‘தெம்பிலிலஹுரு’ என்பவரின் வீட்டிற்கு நேற்று (08) இரவு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது தாயாரும் அவ்வீட்டினுள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இச்சம்பவத்தில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தீ விபத்தினால் வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தேனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.