எழுச்சிப் பாடல் பாடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் பாடகர் சங்கீர்த்தன்வழக்கு:  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை

Meiveli Media Team


எழுச்சிப் பாடல் பாடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் பாடகர் சங்கீர்த்தன், சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீர்த்தனை, சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன் மற்றும் பெனிஸ்லஸ் துஷான் ஆகியோருடன் சென்று சந்தித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாடகரின் தாயாரும் கலந்து கொண்டிருந்தார். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாடகர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகி விரிவான சட்ட வாதங்களை முன்வைத்ததாக சுமந்திரன் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டதாகவும், எனினும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட முடியாதவை என பாதுகாப்பு தரப்பு வாதிட்டதாகவும் அவர் கூறினார். மேலும்இ குறித்த பாடல் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலானது அல்ல என்றும், அதனை அவ்வாறு சித்தரிக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாடகர் சங்கீர்த்தனும் அவரது தாயாரும் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, அவரை விரைவில் விடுவிக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார். இந்த வழக்கின் சட்டபூர்வ நிலை குறித்து உயர்நீதிமன்றத்தில் விரைவில் தீர்வு கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">