ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் .ல்லை: அலி சப்ரி தெரிவிப்பு

Meiveli Media Team


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளார் என்பது அநீதியான ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும்.விசாரணை அதிகாரிகள் செய்வது அரசியலாகும் என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு எப்போதாவது ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்குமா? இதை முன்னெடுத்துச் செல்வதற்கு சாட்சியங்கள் இருக்க வேண்டுமல்லவா?
சானி அபேசேகர ஒரு முறை தனக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியில் தான் முழுநேர அரசியல் செய்வதாகவும் என்.பி.பி கட்சியுடன் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அரசியல்வாதி. எனவே தற்போது அவர் காவல்துறையிலிருந்து முழுமையாக விலகியிருப்பதால் அவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அவ்வாறு அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர் தற்போது மீண்டும் அரச சேவைக்குள் வந்து ஓய்வு பெற்றதன் பின்னர் மீண்டும் சி.ஐ.டி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதாவது ஓர் அரசியல்வாதி காவல்துறையின் சி.ஐ.டி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவையாக நடந்துள்ளது. இது ஒரு பைத்தியக்காரத்தனம்.இப்போது ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை அதிகாரி அரசியல் செய்வதில் தப்பில்லை. ஆனால் அவர் ஓர் அரசியல்வாதியாக மாறிய பின்னர் மீண்டும் வந்து சி.ஐ.டியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டால் அவரால் அந்தப் பணிகளை சுயாதீனமாகச் செய்ய முடியுமா? அப்படியானால் அவருக்கு ஒரு அரசியல் நோக்கம் இருக்குமல்லவா? ஓர் அரசியல்வாதியால் சி.ஐ.டி பணிப்பாளராக வர முடியாது. இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">