தமிழ்நாட்டு முதலமைச்சர் விஐயைச் சந்திக்கவுள்ளோம்:  அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

Meiveli Media Team

ஜீன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் நாங்கள் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜயைச் சந்திக்கத் தீர்மானித்திருக்கின்றோம். இந்தச் சந்திப்பின் போது
இலங்கை மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவோமெனக் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் திரைப்படங்களில் பார்த்து, இரசித்த நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவருக்கு எமது வாழ்த்துக்கள். இந்தியா, தமிழ்நாட்டுத் தேர்தல் காலகட்டங்களில் அங்குள்ள அரசியல்வாதிகள் முன்வைக்கும் சுலோகமாக கச்சதீவு இருந்து வருகிறது. கச்சதீவுப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்குமான பிரச்சினை கிடையாது. அது இறைமையுள்ள இலங்கைத் தீவின் பிரச்சினை.கச்சதீவை நாங்கள் எவருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை எனவும் தெரிவித்தார். .