கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு முன்னால் கடலைத் தானம் வழங்கல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

முப்பொருள் பொதிந்த சம்புத்த வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்த கடலைத் தானம் வழங்கும் (தங்சல) புண்ணிய நிகழ்வு இன்று (31) பிற்பகல் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை விகாரைக்கு முன்னால் நடைபெற்றது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர்கள், அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்காகவே இந்தத் தான நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹேனேகம தம்மாதார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இந்தத் தானம் வழங்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹேமந்த விக்ரமபால, செயலாளர் தினேஷ் பெரேரா உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


