கொழும்பு செட்டியார் தெருவில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க தன்சல் நிகழ்வு – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தான்சல் நிகழ்வு நேற்றைய தினம் [30.05.2026] மாலை கொழும்பு செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டீ சொய்சா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான மகேஷ் குமாரசிங்க, ஜெயந்த டீ சில்வா, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி சமந்த டீ சில்வா உட்பட அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பிது வைத்தனர்.
ஆறாவது வருடமாக நடைபெற்ற இந்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வெஷாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


