C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றத்தில் முன்னிலையாகும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் மற்றும் தனிப்பட்ட நலனைக் கருத்திற்கொண்டு, அவரது தனிப்பட்ட விபரங்களையோ அல்லது இந்த வழக்கு சார்ந்த விசாரணைத் தகவல்களையோ ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களிடம் அமைச்சர் இதன்போது மிகவும் நயமாகக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, நாட்டின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் மற்றும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில், எதிர்க்கட்சியினரும் இன்னும் சில குழுக்களும் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட முயற்சிகளுக்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிட்ட அமைச்சர், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்பதையும் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.