போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி:இஸ்ரேல்-அமீரக ரகசியச் சந்திப்பு.ஈரான் கடும் கண்டனம்!
Meiveli Media Team

ஈரானுடனான மோதல் நிலைமையின்போது, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அவர்களை சந்தித்ததாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.‘சிங்கத்தின் கர்ஜனை’ நடவடிக்கையின் போது இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அதே நேரத்தில் அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலைகள் தொடர்ந்தன. இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பணியாளர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த ரகசிய சந்திப்பு குறித்து ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நெதன்யாகு தங்கள் நாட்டுக்கு வரவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

