திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம்

Meiveli Media Team


முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி கோவிலின் வருமானம் மாவட்ட அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய நிலையில் கோவிலின் வருமானம் புத்தசாசன அமைச்சிற்கு செலுத்தப்பட்டு, அது வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக மீள வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.குறித்த வருமானத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு தனி பிரதேச சபை அமைப்பது தொடர்பான முன்மொழிவையும் அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.மேலும், அரச திணைக்களங்களால் பயன்படுத்தப்படும் அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான தகவல்களை தொகுத்து மாவட்ட அபிவிருத்திக்குழுவில் முன்வைக்க வேண்டும் எனும் தீர்மானத்தையும் கூட்டத்தில் முன்மொழிந்ததாக அவர் தெரிவித்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">