ஜனாதிபதி Anura Kumara Dissanayake தமிழக முதலமைச்சர் C. Joseph Vijay அவர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்திக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Meiveli Media Team

தமிழக முதல்வராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தூதரக மரபுகளுக்கு ஏற்பதல்ல எனக் கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைவர்கள் மட்டுமே இவ்வகை வாழ்த்துகளைப் பெறுவது வழக்கம் என தெரிவித்துள்ளது.மேலும், சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற இந்திய மாநில முதல்வர்களுக்கு இதேபோன்ற வாழ்த்துகள் அனுப்பப்படாதது ஏன் என்றும் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை–தமிழ்நாடு இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலியுறுத்தி, ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தே அதிபர் தனது வாழ்த்தை அனுப்பியிருந்தார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

