கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள் கைது!

Meiveli Media Team

தென் மாகாணத்தின் மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் கணினி குற்றச்செயல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 174 இந்தியர்களும் 24 நேபாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்ததுடன், சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பான பாரிய மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.