விஜய் கச்சத்தீவை எடுத்துக்கொள்வாரோ தெரியாது – சாமர சம்பத்

Meiveli Media Team


ஜனாதிபதி தலைமையிலான  இந்த  அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்றுதான் இந்தியாவில்  தமிழ்நாட்டில் விஜய்யும் பொய்களை அள்ளி வீசி  தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கும்  ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ என்று தெரியவில்லை. அந்தளவுக்கு  பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (06) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மே தின கூட்டத்தில் வழக்குகள் தொடர்பிலேயே  ஜனாதிபதி உட்பட ஆளும் கட்சியினர் உரையாற்றினார்கள். இவர்களின் கருத்துக்களால் நீதிபதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.இவ்வாறு செய்வதால் நீதித்துறைக்கு ஏற்படும் நிலைமை என்ன? எங்களை சிறையில் அடைக்க இவர்கள் பட்டியலை தயாரித்துவிட்டனர். இதனால் நான் சட்டத்தரணிகளின் சேவையை பெறுதலிலும் இனி  பயணில்லை. இதனால் இனி நான் சட்டத்தரணிகளை அமர்த்தப் போவதில்லை. எந்த வழக்கையும்  விசாரித்து சிறையில் அடையுங்கள்.ஜனாதிபதி தலைமையிலான  இந்த  அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதேபோன்றுதான் தமிழ்நாட்டில் விஜய்யும் பொய்களை அள்ளி வீசி  தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். இறுதியில் அவருக்கு ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார். இவர் கச்சத்தீவை எடுத்துக்கொள்வாரோ தெரியாது.  ஆளும் தரப்பை  போன்றுதான் விஜய்யும் பொய்களை வாரி வழங்கியுள்ளார். தங்கம் தருகிறேன்,  அதனை தருகின்றேன், இதனை தருகின்றேன் என்றெல்லாம் பல வாக்குறுதியளித்து  விஜய் ஆட்சியை பெற்றுள்ளார். இங்குள்ள நிலைமையை போன்று விஜய்க்கும் தமிழ்நாட்டில் ஆட்சியை கொண்டு செல்ல முடியுமாக இருக்குமோ தெரியவில்லை என்றார்.