செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு

Meiveli Media Team


செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரு கைக்குழந்தையின் மற்றும் மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளன.நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையளாம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதிதாக அகழ்ந்து எடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">