கந்தளாய் வான் எல குளத்து வீதி புனரமைப்பு: 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் ஆரம்பம்!
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய் பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த வான் எல குளத்து வீதியை நவீனம் செய்யும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுமார் 1200 மீற்றர் நீளமுள்ள இந்த வீதியை முழுமையாக புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கி வந்த போக்குவரத்து சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றோசான் அக்பிம அவர்களின் தலைமையில் இன்று குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் றோசான் அக்பிம அவர்களினால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன இதில் கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் அரசியல் வாதிகளும் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நீண்டகால தேவையை பூர்த்தி செய்தமைக்காக பொதுமக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்த வீதிப் பணியினை மிக விரைவில் நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

