இரத்தமும் வியர்வையும் சிந்தியே தீவகத்தில் மக்கள் சூழல் பாதுகாக்கப்பட்டது – இயலாமையை மறைக்க எம்மீது கையை நீட்டக் கூடாது – ஈ.பி.டி.பி!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI


மக்கள் ஒப்படைத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல், தங்களின் இயலாமைகளை மறைப்பதற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் அடுத்தவர் மீது இன்றைய ஆளும் தரப்பினர் கைகளை நீட்டக் கூடாது என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தீவக பிரதேசத்தில் ஈ.பிடிபி. மேற்கொண்ட தொடர்ச்சியான செயற்பாடுகளே அங்கு மக்கள் வாழும் சூழலை பாதுகாத்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுடன் ஈ.பி.டி.பி. கட்சி தீவகத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதிருந்திருந்தால், இரணைதீவு, பாலைதீவு, கச்சதீவு போன்ற மக்கள் வாழாத வனாந்தரமாக தீவகம் மாறியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

“கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் தீவகப் பகுதியில் ஈ.பி.டி.பி அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்த காலகட்டங்களில் அந்தப் பிரதேசங்களில் வாழந்து வந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளை, அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதே முதன்மை பணியாக காணப்பட்டது.

அதனை நாம் திறம்படச் செய்ததன் மூலமே, தீவகப் பகுதியில் மக்கள் தொடர்ச்சியாக வாழக்கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை அக்காலப் பகுதியில் அந்தப் பிரதேத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஒரு பிரதேசத்திலே மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அந்தப் பிரதேசத்திற்கான போக்குவரத்து சுமூகமானதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு அமைவாக தீவகப் பகுதிகளுக்கான சீரான போக்குவரத்தினை முன்னெப்பதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது வரலாறு.

இன்று அலையிலே அடிப்பட்டு வந்து நின்றுகொண்டு, தீவகத்தில் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ஜட்டியை கட்டினாரா? என்று கேட்கின்றவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

டக்ளஸ் தேவானந்தா ஜட்டியை கட்டவில்லை. ஜெற்றிகளை கட்டியிருக்கின்றார்.

ஊர்காவற்றுறையில் காணப்படுகின்ற கண்ணகி அம்மன் இறங்குதுறை ஈ.பி.டி.பி. தோழர்களின் மனித உழைப்பினாலேயே அது உருவாக்கப்பட்டது.

பின்னர், நிதி ஒதுக்கீடுகளின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு, தற்போது அனலைதீவு. எழுவைதீவு போன்ற தீவுகளுக்கான படகு போக்கவரத்து மார்க்கமாக காணப்படுகின்றது.

அதேபோன்று. நெடுந்தீவு இறங்குதுறையும் எங்களுடைய செயலாளர் நாயகத்தின் முயற்சியினாலேயே நிதிஒதுக்கீடு செய்யப்ட்டு விஸ்தரித்து அபிவித்தி செய்யப்பட்டிருக்கின்றது.

90களின் ஆரம்பத்தில் கடற்படையினரின் கட்டப்பாட்டில் இருந்து குமுதினி படகை மீளப்பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளித்து போக்குவரத்தில் ஈடுபடுத்தியதுடன், சமுத்திரதேவா, வடதாரகை போன்றவை ஈ.பி.டி.பி. இன் முயற்சியினாலேயே பெற்றுக் கொள்ளப்பட்டது.

எங்களுடைய செயலாளர் நாயகத்தின் இறுக்கமான அறிவுறுத்தல் காரணமாகவே, வீதி அதிகார சபையினால் செயற்படுத்தப்படுகின்ற போக்குவரத்து சேவைகள் இன்றளவும் இலவச சேவையையே வழங்கி வருகின்றன.

இவ்வாறான இலவச போக்குவரத்து சேவை இலங்கையில் வேறு எங்கும் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தீவகத்திற்கு மின்சாரத்தினை கொடுத்தது யார்?.

இருளில் மூழ்கிக் கிடந்த தீவகத்திற்கு மின்சாரத்தினை வழங்கும் நோக்கோடு அனைத்து தீவுகளுக்கும் மின்பிறப்பாக்கிகளை பொருத்தி மின்சாரத்தை வழங்கியிருந்துடன், குறைந்த செலவுடனும், தடையற்ற மின்சாரம் தீவகத்திற்க கிடைக்க வேண்டும், தொழிற்சாலைகளின் உருவாக்கத்திற்கும் நிலையான அபிவிருத்திக்கும் தடையற்ற மின்சாரம் அவசியம் என்பதை புரிந்துகொண்டு, கடந்த ஆட்சிக் காலத்தில், இந்திய அரசாங்கத்துடன் கதைத்து நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய இடங்களில் காற்றாலை மற்றும் சூரியகலத் தொகுதி அடங்கிய மின்சார உற்பத்தி கட்டமைப்புக்கள் உருவாக்குதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் இந்த வருட இறுதியில் அவற்றின் மூலம் குறித்த பகுதிகளுக்கான மின்சாரத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ககப்படுகின்றது.

அதேபோன்றுதான் குடிநீர் பிரச்சினை. நெடுந்தீவை பொறத்தவரையில் அது சவாலான பிரச்சினையாகவே இருந்து வருகின்ற நிலையில், தாராப்பிட்டி குடிநீர் கிணறுகளை காலத்துக்கு காலம் புனரமைத்து பராமரிப்பததில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அதனடிப்படையில் அந்த கிணறுகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டி பொறு தற்போது அதிகாரத்தில் இருக்கின்றவர்களுக்கும் இருக்கின்றது.

அதுமாத்திரமல்ல, தீவகத்திற்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்ற சிலர், தீவகத்திற்கு குடிநீரை கொண்டு வருவதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட இரணைமடு திட்டத்தினை தடுத்த நிலையில், மாற்றுத் திட்டமாக உருவாக்கப்பட்ட தாழையடி குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது தீவகப் பகுதிகளுக்கு அண்மையில் குடிநீர் விநியோம் ஆரம்பிக்கப்பட்டுள்ள.

குறித்த திட்டம், கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு தீவத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உள் கட்டுமானங்களும் ஈ.பி.டி.பி. இன் காலத்தில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்திலில் உருவாக்கப்பட்டவை.இதற்கு இன்றுள்ளவர்கள் உரிமை கோர முடியாது.

மேலும் தீவகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் பல்வேறு தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்ட வேண்டி இருக்கின்றன.

தீவகம் எனது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடப்படுகின்றபோது, பின்தங்கிய நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன.

அந்த நிலை மாற்றப்பட வேண்டும். அந்த மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தீவகத்தினையும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு நிகராக முன்னேற்றுவதற்கான அடிப்படைளை உருவாக்கி இருக்கின்றோம்.

அதனை தொடர்ந்து முன்கொண்டு செல்வதே தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாக இருக்க முடியும்.

மாறாக மக்கள் தங்களிடம் ஒப்படைத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல், தங்களின் இயலாமைகளை மறைப்பதற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் ஈ.பி.டி.பி. மீது யாரும் கைகளை நீட்டக் கூடாது என்றும் தெரிவுத்துள்ளார்.