தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் சூறையாடல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Meiveli Media Team


தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய கணக்குகளில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்ச மற்றும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன அல்விஸ், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட நீதிபதிகள் சிலர் இணைந்து தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வைப்பு செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக சர்வதேச இணையத்தளம் ஒன்று தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த பணம் எவ்வாறு சூறையாடப்பட்டுள்ளது என்பது தொடர்பில்  விரிவான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. 2009 ஜுலை 21 ஆம் திகதி சுப்பிரமணியம் சிவகுமார் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்படுகிறார். அச்சந்தர்ப்பத்தில் நிமால் சந்திர வாக்கிஸ்ட தான் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதானியாக இருந்துள்ளார். அப்போது அதன் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக பிரசன்ன அல்விஸ் இருந்துள்ளார்.பின்னர் அவர் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சுப்பிரமணியம் சிவகுமாரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மேலும் 8 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளறன. இந்த தகவல்களை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன அல்விஸ் தனது கையொப்பத்துடன் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கைதான இவரைத் தொடர்ந்து சர்வதேச தளத்தில் செயற்பட்ட எட்டு உறுப்பினர்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுளத.

அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியில் செயற்பட்ட முக்கிய புள்ளிகளான
1.நடராஜா ரத்தன சபாபதி அல்லது நரேந்திரன்
2.சிவராசா லிங்கேஸ்வரம் அல்லது திலீபன் அல்லது லிங்கேஸ்வரன்
3.சிவராசா பிரபாதரன் அல்லது அச்சுதன் அல்லது சுரேஷ்
4.கணேஷ் ரூபன் அல்லது ரூபன்
5.சிவசுப்பிரமணியம் தயாபரன் அல்லது தவராசா அல்லது கபீர்
6.சானா சந்திரன் அல்லது சானா அல்லது ராஜேந்திரன்
7.பொன்னையா ஆனந்தராஜா அல்லது ராஜா அல்லது அய்யண்ணா
8.சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது அறிவழகன் ஆகியோராவர்

இவர்களை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன அல்விஸ் மனு தாக்கல் செய்தபோது பிடியாணை வழங்கப்படுகிறது. அதில் முக்கிய நபராக நடராஜா ரத்தன சபாபதி அல்லது நரேந்திரன் குறிப்பிடப்படுகிறார். அவருக்கு எதிராக ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டிருக்கும் போதை பொருள் ஒழிப்பு மற்றும் நிதிமோசடி பிரிவுகள் இணைந்து நடத்திய விசாரணைகளில் இரு வங்கி கணக்குகளில் பணம் வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஒன்றில் 1759 யூரோவும் மற்றையதில் நான்கு இலட்சத்து 772 அமெரிக்க டொலரும் மேலும் அபுடாபி வங்கி ஒன்றில் 13 இலட்சத்து 97 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் இருந்துள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சுரேஷ் சலே உள்ளிட்ட குழுவினர் கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இரு முறை அபுதாபி சென்று வந்துள்ளனர். அபுதாபியில் நடராஜா ரத்தன சபாபதியை சந்தித்து அவரிடம் பல பக்கங்களுக்கு வாக்கு மூலமும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பின்னர் அந்த பணம் அவருடையது அல்ல என நீதிமன்றத்திற்கு பல காரணங்களை தெரிவித்து அவர்கள் எட்டு பேருக்கு இருந்த சர்வதேச சிவப்பு பிடியாணையை இரத்துச் செய்தனர். ஹொங்கொங் வங்கியில் இருந்த பணம் கொள்ளுப்பிட்டியிலுள்ள யூனியன் வங்கியின் கணக்குக்கு மாற்றப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு இது தொடர்பில் நடத்திய விசாரணைகளில் குறித்த பணம் அரசுடமையாக்கப்பட்டது. ஆனால் அபுதாபி வங்கியில் நடராஜா ரத்தன சபாபதி வைத்திருந்த 13 இலட்சத்து 97 ஆயிரத்து 500 அமெரிக்க டொலருக்கு என்ன நடந்தது. ஏன் இது வரை எவ்வித தகவல்களும் அதாவது 2795 இலட்சம் ரூபாவுக்கு என்ன நடந்தது. சுரேஷ் சலே மற்றும் கோட்டாயவுடன் அன்று இணைந்து விசாரணை நடத்தியவர்களின் கைகளுக்கு போயுள்ளதாகவே தெரியவருகிறது.

அதனாலே அவர்கள் நடராஜா ரத்தன சபாபதியை சந்திக்க அபுதாபி சென்றிருக்க வேண்டும் மேலும் அவர்களை தண்டனையில் இருந்து விடுத்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.