ஹார்மூஸ் நீரிணை பதற்றம்: அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும்: வலியுறுத்தியது சீனா ம்றும் பிரித்தானியா
Meiveli Media Team

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
ஊலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவது அவசியம் என்று சீனா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க சீனா தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே, பதற்றமான சூழலைத் தவிர்த்து, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியை பாதுகாக்க இணைந்து செயல்படுமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, ஹார்முஸ் நீரிணைமீதான முற்றுகை நடவடிக்கைக்கு பிரிட்டன் ஆதரவளிக்காது என பிரதமர் கீயர் ஸ்ராமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதே தமது நாட்டின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனவும் ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

