கொழும்பு துறைமுகத்தில்  பாகிஸ்தான் கடற்படையின் இரு போர்க்கப்பல்கள்

Meiveli Media Team

பாகிஸ்தான் கடற்படையின் இரு போர்க்கப்பல்கள்  கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன. நல்லெண்ணப் பயணமாகவே பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS Taimur’ மற்றும் ‘PNS Aslat’ ஆகிய போர்க் கப்பல்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைகடற்படையால் சம்பிரதாயப்பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து பாகிஸ்தான் கற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது என தெரியவருகின்றது. இந்தப் பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி, கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.