யாழில். சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை ஆரம்பித்து வைக்க வருகை தந்த தருமை ஆதீனம்

Meiveli Media Team

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு தர்மபுர ஆதீன அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகை தந்தவரை,  சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, கலாநிதி ஆறு திருமுருகன், இலங்கை இந்து மத குரு பீடத்தின் தலைவர் சிவ ஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் நல்லை ஆதீனத்தினர் உள்ளிட்டவர்கள்  வரவேற்பளித்தனர்