ஊழல் இல்லாத ஆட்சி வேணும் என்றால்  விஜய் வர வேண்டும்:  செங்கோட்டையன் கருத்து

Meiveli Media Team


பாஜகவுக்கு வாக்கு செலுத்துவது என்பது நோட்டாவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். திமுகவை வீழ்த்தும் வலிமை பாஜகவிடம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசியலில் ஊழலற்ற ஆட்சியைத் தரப்போகிறோம் என்று நடிகர் விஜய்யைத் தவிர வேறு யாராலும் துணிச்சலாகச் சொல்ல முடியவில்லை எனப் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தும் விஜய்யின் அரசியல் நகர்வு, மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதை அவரது இந்தப் பேச்சு உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">