இந்தியாவின் ‘ஆக்ரா’வுக்கு தம்பதிவ யாத்திரை சென்ற இலங்கையர்களின் பஸ் தீப்பற்றியது

Meiveli Media Team

 

இந்தியாவிற்கு பௌத்த புனித யாத்திரை -தம்பதிவ  சென்றிருந்த இலங்கை யாத்ரீகர்கள் குழுவினர் பயணித்த பஸ் ஒன்று ஆக்ரா பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு பௌத்த சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ்ஸின் குளிரூட்டி அமைப்பில்  ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திர ஹல்லொலுவ குறிப்பிட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது பஸ்ஸில் 45 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீப்பிடித்த உடனே பஸ்ஸில் இருந்தவர்கள் தமது உடைமைகளுடன் பத்திரமாக வெளியேறியுள்ளதாகவும், திட்டமிட்டபடி தமது யாத்திரையை நிறைவு செய்துள்ள இந்தப் பிரிவினர், இன்றைய தினம் மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக மகேந்திர ஹல்லொலுவ மேலும் தெரிவித்தார்.