திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்… திருமாவளவன் வாங்கிய 8 தொகுதிகள் – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்
Meiveli Media Team

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு செவ்வாயன்று சுமுகமாக முடிவடைந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மற்றும் விசிக தலைவர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, விசிகவிற்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். கடந்த தேர்தல்களை விட விசிகவிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால் திமுக தனது மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டையும் ஏறத்தாழ இறுதி செய்துவிட்டது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, காங்கிரஸிற்கு 28 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிகவினரின் நலன் மற்றும் கூட்டணியின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே இந்தத் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக அரசியல் பாதுகாப்புதான் எங்களின் முதன்மையான இலக்கு, என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘வலதுசாரி மற்றும் சாதிய இயக்கங்கள் தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும், மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இந்த முடிவை எடுத்துள்ளோம், என்று அவர் கூறியுள்ளார். தொகுதி எண்ணிக்கையை விட, தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி முக்கியம் என்பதில் விசிக உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், திமுக கூட்டணியுடனான பயணம் தொடர்ந்து நீடிக்கும் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

