ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரம் அவகாசம்:ஈரானை எச்சரித்த டிரமப்

Meiveli Media Team

ஈரான் நிபந்தனையின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், அமெரிக்கா அதன் மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாக அழித்துவிடும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு புதிய காலக்கெடுவை விதித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருவதாக அவர் கூறினார்.

ட்ரம்பின் காலக்கெடுவின்படி ஈரானுக்கு இப்போது ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினர். டௌனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதித்தனர்.’ என்றார். உலக எரிசக்தி சந்தைகளில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது இன்றியமையாதது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் விரைவில் மீண்டும் பேசுவார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.